உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு

பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலை ஓரத்தில் பேனர்கள் வைக்கப்படுவதால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதனால், புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், மறைமலை அடிகள் சாலை, தென்னஞ்சாலை, திருவள்ளுவர் சாலை ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் பேனர் வைக்கப்பட்டிருந்தன. பேனர் வைத்த பா.ஜ., பிரமுகர் பிரபுதாஸ் மீது, நகராட்சி உதவிப் பொறியாளர் நமச்சிவாயம், உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை