பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
புதுச்சேரி : இடப்பிரச்னையில், பெண்ணை தாக்கி சி.சி.டி.வி.,கேமராவை சேதப்படுத்திய தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ரெட்டியார்பாளையம் அடுத்த முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி நிஷா, 23, இவரது குடும்பத்தினருக்கும், அருகில் உள்ள கணவரின் உறவினரான மோகன்ராஜ் குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னைஇருந்து வருகிறது.இந்நிலையில், மணிகண்டன் கார்,சவாரி தொடர்பாக வெளியூருக்குசென்றுள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவி நிஷாவை, கணவரின் உறவினர் மோகன்ராஜ், அவரது மனைவி விஜயலட்சுமி இருவரும் சேர்ந்து தாக்கி, வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை சேதப்படுத்தினர்.புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார், தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.