உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு கட்டி கொடுப்பதாக ரூ.7.80 லட்சம் மோசடி: பொறியாளர் மீது வழக்கு 

வீடு கட்டி கொடுப்பதாக ரூ.7.80 லட்சம் மோசடி: பொறியாளர் மீது வழக்கு 

பாகூர்: வீடு கட்டி தருவதாக கூறி ரூ.7. 80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பொறியாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த பின்னாச்சிகுப்பம் முத்தாலம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜேக்கப் வருண் பிரவீன் 42; இவர் வீட்டின் மேல் மாடியில் வீடு கட்டுவதற்கு, வில்லியனுார் அடுத்த மணவெளியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் அருள்ராஜ் என்பவரிடம் 13 லட்சத்து 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், அருள்ராஜ் கேட்டதன் பேரில் ஜேக்கப் வருண் பிரவீன், அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். அதன் பின், கட்டுமான பணிகள் சரிவர நடக்கவில்லை. இதையடுத்து, ஜோக்கப் வருண் பிரவீன் மொபைல் மூலம் அருள்ராஜை தொடர்பு கொண்டு கட்டுமானம் குறித்து கேட்டபோது, சரியான பதில் இல்லை. பின், மணவெளியில் உள்ள அருள்ராஜ் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த முகவரியில் அலுவலகம் ஏதுவும் இல்லை என்பதும், அது போலியான முகவரி என்பதும் தெரியவந்தது. இது குறித்து ஜேக்கப் வருண் பிரவீன், வீடு கட்டு மான பணியை முடிக்கா மல், 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக பொறியாளர் அருள்ராஜ் மீது தெற்கு எஸ்.பி., பக்தவசலத்திடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் பாகூர், போலீசார் பொறியாளர் அருள்ராஜ் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ