உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது வழக்கு

மாஜி ஊழியரை தாக்கிய உரிமையாளர் மீது வழக்கு

புதுச்சேரி : வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஆத்திரத்தில், முன்னாள் ஊழியரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் சிவக்குமார்,56; ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது தம்பி ஜெயசங்கர், 54; உறுவையாறு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அங்கு சம்பளம் குறைவாக இருந்ததால், வில்லியனுாரில் உள்ள வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பழைய நிறுவனத்தின் உரிமையாளர் பத்மராஜன், கடந்த 22ம் தேதி மூலக்குளத்தில் பைக்கில் சென்ற ஜெயசங்கரை தடுத்து நிறுத்தி, ஆபாசமாக திட்டி, தாக்கினார். அதில், காயமடைந்த ஜெயசங்கர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து அவரது அண்ணன் சிவக்குமார், அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார், பத்மராஜன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை