மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கியவர் கைது
02-Jun-2025
காரைக்கால் : காரைக்காலில் குடிபோதையில் தங்கையை தாக்கிய அக்கா கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரைக்கால் நிரவி நடுக்களம்பேட் சுனாமி காலனி தெருவை சேர்ந்த வீரமணி மகள் விஜயலெட்சுமி. மளிகை கடையில் பணியாற்றி வருகின்றார். .இவரது அக்கா வினோதியா. இவரது கணவர் ஜெயசீலன் , 35 ஆகியோர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அக்கா கணவர் ஜெயசீலன் தினம் மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் நேற்று முன்தினம் குடிபோதையில் விஜயலட்சுமியை, ஜெயசீலன் ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் ஜெயசீலன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Jun-2025