உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு

போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருசன் மகன் சத்தியசீலன், 38. இவர், கடந்த 21ம் தேதி, நண்பர்களுடன் சென்று உப்பளம் மைதானத்தில் மது குடித்தார். அங்கு போதையில் இருந்த ஆட்டுப்பட்டியை சேர்ந்த இளையராஜா, 25; முருகன், 40; ரஞ்சித், 28, ஆகியோர் போதையில் இருந்த சத்தியசீலனை கீழே தள்ளி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி, அவரை தாக்கினர். காயமடைந்த, அவர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், இளையராஜா உட்பட 3 பேர் மீது ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !