உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.சி.,யை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்குப் பதிவு

ஏ.சி.,யை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் ஏ.சி., யூனிட்டை சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளைதோட்டத்தை சேர்ந்தவர் செல்வி, 47. இவர் தனது வீட்டில் ஏ.சி.,யை பயன்படுத்தி வந்தார். இதன் அவுட்டோர் யூனிட் வைக்கப்பட்டுள்ள சிலாப், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜி, என்பவரின் வீட்டின் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்தது.இதனால், பாலாஜி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் முத்து, அலெக்ஸ் ஆகியோர் நேற்று முன்தினம் ஏ.சி., அவுட்டோர் யூனிட்டை சேதப்படுத்தியுள்ளனர்.தடுக்க முயன்ற செல்வி மற்றும் அவரது மகனுக்கு மிரட்டல் விடுத்தனர்.செல்வி புகாரின் பேரில், பாலாஜி, முத்து, அலெக்ஸ் ஆகியோர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை