மேலும் செய்திகள்
மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர்
19-May-2025
புதுச்சேரி: ரவுடியை கொலை செய்ய முயன்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, ஒதியஞ்சாலை, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) ஸ்டிக்கர் மணி, 24; ரவுடியான இவர் மீது அடிதடி, நாட்டு வெடிகுண்டு வீச்சு, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.தனது எதிரியான கோவிந்த சாலையை சேர்ந்த லோகபிரகாஷை கொலை செய்யும் நோக்கத்தில் நாட்டு வெடிகுண்டு செய்து வைத்திருந்தபோது, ஒதியஞ்சாலை போலீசார் மணிகண்டனை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைந்தனர்.கடந்த 10 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வந்த மணிகண்டன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில், தனது காதலியை திருமணம் செய்ய முடிவு செய்து, புதிதாக துணி எடுக்க சந்திக்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் பைக்கில் புதுச்சேரி நகரப்பகுதிக்கு வந்துவிட்டு, மீண்டும் சந்திக்குப்பம் சென்று கொண்டிருந்தார்.கொம்பாக்கம் மாதா கோவில் தெரு சந்திப்பு அருகே சென்றபோது, மணிகண்டனின் எதிரியான லோகபிரகாஷின் நண்பர்கள் பெரியார் நகர் தனுஷ், பாவாணர் நகர் சுனில், அவரது தம்பி சஞ்சய், கோவிந்தசாலை குட்டி சந்துரு மற்றும் 3 பேர் மணிகண்டன் சென்ற பைக்கை மறித்து, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினர்.பலத்த காயத்துடன் தப்பிய மணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தனுஷ் உட்பட 7 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-May-2025