உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 

தச்சு தொழிலாளி மீது வழக்கு பதிவு 

புதுச்சேரி: மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தச்சு தொழிலாளி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணபதி, தச்சுதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், ஒரு வீட்டிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 75 வயது மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.மூதாட்டி சத்தம் போட்டதால், கணபதி அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய, கணபதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புகாரின் பேரில், கணபதி மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை