மேலும் செய்திகள்
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
18-Apr-2025
புதுச்சேரி : புதுச்சேரி, தேசிய நெடுஞ்சாலைத்துறை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் நேற்று முன்தினம், இ.சி.ஆரில் ஆய்வு செய்தார். சிவாஜி சிலை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதே போல், முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதி, காந்தி வீதி சாலையில் பேனர் வைத்தவர்கள் மீதும், போலீசார் வழக்கு பதிந்தனர்.
18-Apr-2025