உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் மீது வழக்கு  பதிவு

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பெண் மீது வழக்கு  பதிவு

நெட்டப்பாக்கம், : ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்டசோழநல்லுார் சிவன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 42; நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் வில்லியனுாரைச் சேர்ந்த ஆரியமாலாவிடம் ரூ. 10 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். இதற்காக அருணாச்சலம் ஜி பே மூலம் பல தவணைகளாக ரூ. 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை ஆரியமலாவிற்கு அனுப்பினார். ஆனால் ஆரியமாலா ஏலச்சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து அருணாச்சலம், ஆரியாமலாவிடம் பணத்தை கேட்டபோது அவர், ரூ. 60 ஆயிரம் அனுப்பி விட்டு, மீதி பணம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அருணாச்சலம் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆரியமாலா மீது போலீசார் மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ