உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சி.சி.டி.வி., கேமரா இயக்கி வைப்பு

சி.சி.டி.வி., கேமரா இயக்கி வைப்பு

திருபுவனை : மதகடிப்பட்டு மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் சி.சி.டி.வி., கேமராவை அங்காளன் எம்.எல்.ஏ., போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி ஆகியோர் இயக்கி வைத்தனர்.திருபுவனை தொகுதியில் முக்கிய இடங்களில் குற்றம் மற்றும் விபத்துக்களை தடுக்க சி.சி.டி.வி., கேமரா பொருத்த அங்காளன் எம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, முதல் கட்டமாக திருபுவனை தொகுதி, கொத்தபுரிநத்தம் மூன்று முனை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராவை எம்.எல்.ஏ., மற்றும் எஸ்.பி., ஆகியோர் கடந்த 24ம் தேதி இயக்கி வைத்தனர்.இரண்டாம் கட்டமாக மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி ஆகியோர் சி.சி.டி.வி., கேமராவை இயக்கி, வைத்தனர்.நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !