லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி செண்பக விநாயகர் கோவில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார். லாஸ்பேட்டை தொகுதி செண்பக விநாயகர் கோவில் தெருவில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உழவர்கரை நகராட்சி மூலம் ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிட்டில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், காங்., நிர்வாகிகள், கமலா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.