உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை பணி நேரு எம்.எல்.ஏ., ஆய்வு

சிமென்ட் சாலை பணி நேரு எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.உருளையன் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, திருமுடி நகர் பகுதியில், முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருவில், புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை, தொகுதி எம்.எல்.ஏ., நேரு நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மழை காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.ஆய்வில் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர்கள் சங்கர், சிவபிரகாசம் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை