உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்க வஸ்திரம் வழங்கும் நிகழ்ச்சி

 திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்க வஸ்திரம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: வில்லியனுார் தேரோட்டத்தில் கோகிலாம்பிகை, திருக்காமீஸ்வரருக்கு அணிவிக்க மீனவ குல மரபினர் வஸ்திரம், மலர் மாலை சீர்வரிசை வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீசுவரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, திருத்தேரில் பவனி வரும் கோகிலாம்பிகை மற்றும் திருக்காமீஸ்வரர் சுவாமிகளுக்கு அணிவிக்கும் வேட்டி, புடவை போன்ற வஸ்திரங்கள், மாலைகள் ஆகியவை தாய் வீட்டு சீதனமாக புதுச்சேரி மற்றும் வில்லியனுாரில் வசிக்கும் மீனவ குல மரபினர் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்த்திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மீனவ குல மரபினர் சார்பில் தேசிய மீனவர் பேரவை அகில இந்திய தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ தலைமையில் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., ரவிக்குமார், மீனவ சமுதாயத்தினர் வழங்கிய சீர்வரிசைகளை கோவில் தலைமை அர்ச்சகர் சிவா குருக்களிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி