உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் உத்தரவின்படி, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், பிற துறைகளில் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரி, தலைமை தேர்தல் அதிகாரியாக ஜவகர் செயல்படுவார். இந்த தகவலை தலைமை செயலர் சரத்சவுகான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ