உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு

மண்டல அறிவியல் கண்காட்சி முதல்வர் துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் மண்டலஅறிவியல் கண்காட்சி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.கண்காட்சியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வி இயக்கம் இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.கண்காட்சியில் அரசு பள்ளிகள் 243, தனியார் பள்ளிகள் 157 என, 400 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன.கண்காட்சியில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், டில்லி தேசிய புத்தக அறக்கட்டளை, அடல் இங்க்யுபேஷன் மையம், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை, கரிக்கலாம்பாக்கம் முதன்மை சுகாதார மையம், அரபிந்தோ சமூக அமைப்பு, அரபிந்தோ சமூக அமைப்பு இயந்திரமயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புகையிலை விழிப்புணர்வு மற்றும் புதுச்சேரி காவல்துறை (போக்குவரத்து) ஆகிய அரங்கங்கள் இடம்பெற்றன. கணகாட்சியை நெட்டப்பாக்கம் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பள்ளிககளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.கண்காட்சி காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிடலாம். மாலை 4:00 மணி முதல் 5:00 மணிவரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.தொடர்ந்து, 6,7ம் தேதிகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியும் இப்பள்ளியில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி