உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புயலால் புதுச்சேரியில் கடல் சீற்றம் கொட்டும் மழையில் முதல்வர் ஆய்வு

புயலால் புதுச்சேரியில் கடல் சீற்றம் கொட்டும் மழையில் முதல்வர் ஆய்வு

புதுச்சேரி: பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்தை முதல்வர் ரங்கசாமி கொட்டும் மழையில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அதையொட்டி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் மற்றும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கடல் மற்றும் கடற்கரைக்கு செல்வதை தடை செய்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று காலை முதல்வர் ரங்கசாமி கொட்டும் மழையில், கடற்கரை சாலையில் உள்ள 'லே கபே' உணவகத்திற்கு வந்து, கடல் சீற்றத்தை பார்வையிட்டார். மழைநீர் தேங்கியுள்ளதா என காரில் சென்றவாறே நகரப்பகுதியை பார்வையிட்டார்.கலெக்டர் குலோத்துங்கன் முதல்வரை சந்தித்து புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.ஆய்வின் போது ரமேஷ் எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை