வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யார்எது.ிசய்தாலும்.மக்களுக்குநல்ல தே.ிசய்ய.வேண்டும்.
புதுச்சேரி : புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 37வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, புதிய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, நேரு எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க., சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், நாகமணி, நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.புதுச்சேரி மாநில அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில நிர்வாகிகள் மாசிலா, குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, செல்வராஜ், கோவிந்தம்மாள், விஜயலட்சுமி, சதாசிவம், மாநில அணி செயலாளர்கள் வெரோனிகா, முருகன், நகர செயலாளர் சேகர், பிரபு, சித்தா கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
யார்எது.ிசய்தாலும்.மக்களுக்குநல்ல தே.ிசய்ய.வேண்டும்.