உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்கூட்டர் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்கூட்டர் வழங்கல்

புதுச்சேரி, : இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டரை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.அரசு சமூக நலத்துறை மூலம் இந்திராநகர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 11 பேருக்கு ஸ்கூட்டர்கள் வழங்கு நிகழ்ச்சி அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சமூக நலத் துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம், அதிகாரிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை