மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்குவதால் அவதி
02-Mar-2025
புதுச்சேரி : பாகூரில் நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.சட்டசபை கேள்வி நேரத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குடியிருப்பு மற்றும் கடைவீதி உள்ளிட்ட மையப் பகுதியில் உள்ளதை மாற்று இடத்தில் அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க அரசு முன்வருமா?இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோன்று பாகூர் பஸ்ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றார்.
02-Mar-2025