உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 27 பேருக்கு ஆவண எழுத்தர் உரிமம் முதல்வர் ரங்கசாமி வழங்கல்

27 பேருக்கு ஆவண எழுத்தர் உரிமம் முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில், 27 பேருக்கு ஆவண எழுத்தர் உரிமங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரியில் ஆவண தயாரிப்பில் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பதிவுத்துறையால், ஆவண எழுத்தர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த, 2021-22, கல்வியாண்டு வரை, ஆவண தயாரிப்பில் பட்டயப்படிப்பு முடித்த, 27 பேர் எழுத்தர் உரிமத்திற்காக விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்கள் ஆவண எழுத்தர் உரிமம் பெற தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில் குறிப்பிட்ட 27 பேருக்கு, ஆவணஎழுத்தர் உரிமங்களை முதல்வர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர் கேசவன், பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் தயாளன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ