உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்

பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி; வீராம்பட்டினம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டா வழங்கினார்.அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் ராதாக்கிருஷ்ணன் நகரில் அரசு இடம், ரோடு மற்றும் அதனை ஒட்டிய இடத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வந்தவர்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணை அடிப்படையில் புதுச்சேரி அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சட்டசடையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார், நிலவரித்திட்ட தாசில்தார் சந்தோஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை