மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
வில்லியனுார், : புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.அமைச்சர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.கள் ஆறுமுகம், ரமேஷ், சம்பத், செந்தில்குமார், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ஓம்சக்தி சேகர், மற்றும் பா.ஜ., பல்வேறு பிரிவு நிர்வாகிகள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறந்த நாளை முன்னிட்டு சாய் தியாகராஜன் தலைமையில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்தனர். ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பல்வேறு கிராம கோவில்களில் பா.ஜ., நிர்வாகிகள் சார்பில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.நெட்டப்பாக்கம் மற்றும் திருபுவனை தொகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஏற்பாடுகளை வள்ளலார் ஏஜென்சி உரிமையாளர் சாய் தியாகராஜன் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago