காலாப்பட்டில் முதல்வர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியில் முதல்வர் ரங்கசாமி 75வது பவள விழா மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் முருகேசன் தலைமையில் நடந்த பிறந்த நாள் விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக என்.ஆர்.காங்., வழக்கறிஞர் விஸ்வநாதன், கட்சி பொதுச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சேலை, மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினர். விழாவில் தொகுதி பொறுப்பாளர்கள் வெங்கடேசன், நாராயணசாமி, உமாபதி, குமார், அய்யனார், அய்யப்பன், முத்தமிழ், கலைஞன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.