உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதல்வர் கோப்பை போட்டி: ராக் கல்லுாரி சாதனை

 முதல்வர் கோப்பை போட்டி: ராக் கல்லுாரி சாதனை

புதுச்சேரி: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், பெரம்பை ராக் கல்லுாரி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு மாநில அளவில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், பெரம்பை ராக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாணவர்கள் அஜய், பாலா, சிலம்பு ஆகியோர் கைப்பந்து போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து, 8 லட்சம் ரூபாய் பரிசு பெற்றனர். வாள் சண்டை போட்டியில் சஞ்சய் இரண்டாம் இடம், மாநில அளவிளான பெண்கள் கேரம் விளையாட்டுப் போட்டியில், வேதியியல் துறையைச் சேர்ந்த ஜெயப்பிரியா முதலிடம் பெற்றார். ஆண்களுக்கான சிலம்பம் போட்டியில் மேலாண்மையியல் துறை தானிஷ் முதல் இடம், வணிகவியல் துறை சிவராமன் மூன்றாம் இடம் பிடித்தனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லுாரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில், ராக் கல்லுாரி மாணவர் நிஷாந்த் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இக்கல்லுாரி அணி ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் வீரப்பன், புவனேஸ்வரி ஆகியோரை, கல்லுாரி தாளாளர் முகமது பாரூக், முதல்வர் அன்வர் பாஷா, துணை முதல்வர் செந்தில்நாதன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை