சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 2 ரவுடிகள் கைது
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 ரவுடிகள் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடிகளான கோசக்குமார், 46, புதுச்சேரி பழைய சாரத்தை சேர்ந்த மொட்டை மணி 45, ஆகியோரை கைது செய்தனர்.