உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கினார். கவுரவ விருந்தினராக, பிறரன்பின் பணியாளர்கள் சபையின் தலைமை அருட்சகோதரி பென்சிட்டா பங்கேற்றார். பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்றார். விழாவில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் பேசுகையில், 'கடவுளின் அன்பின் வெளிப்பாடாகப் பிறந்த ஏசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கத்தை, நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அவர் போதித்த அன்பு, தியாகம், மனித நேயம், எளிமை மற்றும் இரக்கத்தை மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். எனவே, மாணவர்கள் அனைவரும் பகிர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என்றார். விழாவில், உழவர்கரை நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பிராவிடன்ஸ் மாலில் நடந்த பள்ளி அளவிலான பாட்டு போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த, பாடல் குழு மாணவ, மாணவி யரை பேராயர் கவுரவித்தார். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் மாணவர்களுக்கு கேக் வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை