நளன் குளத்தில் துாய்மைப் பணி
காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி மிகவிமர்சியாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 29ம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கடந்த சில தினங்களாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.பக்தர்கள் நளன் குளத்தில் குளித்த பின் பக்தர்கள் விட்டு செல்லும் துணி களை, ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றனர்.