உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கிளினிக்கில் திருடியவர் ஓராண்டிற்கு பின் கைது

 கிளினிக்கில் திருடியவர் ஓராண்டிற்கு பின் கைது

காரைக்கால்: காரைக்காலில் தனியார் கிளினிக்கில் பணம் மற்றும் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் ரயில் நிலையம் அருகே டாக்டர் வனிதா என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆண்டு டிச., 28ம் தேதி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், கிளினிக் கதவை உடைக்கப்பட்டு, 3 லட்சம் பணம் மற்றும் மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. இது குறித்து டாக்டர் வனிதா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஓருவர் கிளினிக் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், 42, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மொபைல் போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ