மேலும் செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
08-Oct-2026
காரைக்கால்: விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், தீபாவளியை முன்னிட்டு காரைக்கால் நெடுங்காடு நாகம்மை திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக துணிக் கடையில் வேலை செய்து வந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த செல்லையா, 55, உட்பட 7 பேர் பணியாற்றி வந்தனர். செல்லையாவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததுடன், மது அருந்தும் பழக்கமும் இருந்தது. கடந்த மூன்று நாட்களாக அவரது கால்கள் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. நேற்று காலை கால்வீக்கம் அதிகரித்ததால் செல்லையாவை சுப்ரமணியன் ஆட்டோவில் முலம் நெடுங்காடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் பரிசோதித்து, செல்லையா இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Oct-2026