மேலும் செய்திகள்
மருத்துவ மூலிகை கருத்தரங்கு
09-Feb-2025
புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவிலியர் கல்லுாரி, இந்திய மனநல செவிலியர்கள் அமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கு கடந்த 7ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். உலக சுகாதார நிறுவன உறுப்பினரும், செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் வரவேற்றார். சபாநாயகர் செல்வம், ரமேஷ் எம்.எல்.ஏ., சிறப்புரை ஆற்றினர்.இந்திய மனநல செவிலியர் அமைப்பின் பொது செயலாளர் பாலமுருகன் நோக்கவுரை ஆற்றினார். தலைவர் ரெட்டம்மா கருத்தரங்கிற்கான ஆய்வு பொருளை விளக்கினார்.இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், ஊரக துறை இயக்குநர் கோவிந்தராஜன் வாழ்த்தி பேசினர்.இதில், 21 மாநிலங்களை சேர்ந்த செவிலிய மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, ஆராய்ச்சி கட்டுகரைகளை வெளியிட்டனர். தொடர்ந்து, இந்திய மனநல சங்கத்தின் புத்தகம் வெளியிடப்பட்டது.கருத்தரங்கின் நிறைவாக இன்று (9ம் தேதி) அரசின் சுகாதார செயலர் ஜெயந்தகுமார் ரே தலைமையில், ஊரகத்துறை இயக்குநர் கோவிந்தராஜன் முன்னிலையில் ஆராய்ச்சி கட்டுரைகள் மதிப்பாய்வு நடக்கிறது.இதில், சங்கத்தின் தலைவர் ரெட்டம்மா, மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், கல்லுாரி முதல்வர் ராமச்சந்திர வி பட், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் செவ்வேல், ஜோசப் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
09-Feb-2025