உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடைத்தேர்லில் ஓட்டளிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

இடைத்தேர்லில் ஓட்டளிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

 புதுச்சேரி: இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தட்டாஞ்சாவடி தொகுதியில் காலியாக உள்ள எம்.எல்.ஏ., பதவியை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளில் வரும் 6ம் தேதி, காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. எனவே, தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை