உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

புதுச்சேரி : முள்ளோடை சாலையில் ஓடும் வெள்ள நீரால், குடிமகன்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள மதுபானக் கடைகளை மூட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதியான பாகூர் உள்ளிட்ட பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. பாகூரில் புகுந்த வெள்ளம், முள்ளோடை வழியாக செல்கிறது. புதுச்சேரி - கடலுார் சாலையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் சென்றது.இதனால் நேற்று 2வது நாளாக கடலுார் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. கடலுாரில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான குடிமகன்கள், முள்ளோடையில் உள்ள மதுபான கடைக்கு வந்து மது அருந்தி செல்வது வழக்கம். முள்ளோடையில் சாலையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் செல்வதால், மதுபானம் குடிக்க வரும் குடிமகன்கள் வெள்ளத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், வெள்ள நீர் குறையும் வரை முள்ளோடையில் உள்ள மதுபான கடைகளை மூட கலெக்டர் குலோத்துங்கன், நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து முள்ளோடையில் உள்ள 30 மதுபான கடைகள் நேற்று மூடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !