காட்டேரிக்குப்பம் அரசு பள்ளிக்கு கலர்புல் கட்டடம் திறப்பு
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வண்ணமயமாக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடந்தது.காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி தனியார் பங்களிப்புடன் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. புதுச்சேரி கேப்ளின் பாயிண்ட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் இப்பணி நடைபெற்றது.வண்ணம் பூசப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, கேப்ளின் பாயிண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சிவக்குமார், மனித வளத்துறை அதிகாரிகள் புகழேந்தி, பிராங்க்ளின், ஸ்ரீதர், ராகுல் ஆகியோர் நோக்கவுரையாற்றினர். விழாவை, பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் ஒருங்கிணைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக முதன்மை கல்வி அலுவலர் மோகன், வட்டம் 5 பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வண்ணம் பூசப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தனர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பரமேஸ்வரி முருகன், பள்ளி எஸ்.எம்.சி., தலைவி அம்சவள்ளி, பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் விஜயலட்சுமி, இந்துமதி, முத்தரசி, பானுப்பிரியா, ராஜேஸ்வரி, லாவண்யா, கலைச்செல்வி, பள்ளி ஊழியர்கள் புஷ்பாவதி, கீதா, மல்லிகா ஆகியோர் செய்திருந்தனர்.