உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில் உரிமம் புதுப்பிக்க ஆணையர் அறிவுறுத்தல்

தொழில் உரிமம் புதுப்பிக்க ஆணையர் அறிவுறுத்தல்

அரியாங்குப்பம்; அரியாங்குப்பம் பகுதியில், தொழில் உரிமம் பெற்றவர்கள், வரும் 28ம் தேதிக்குள், புதுப்பிக்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:அரியாங்குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 2024-25ம் ஆண்டுக்கான, தொழில் உரிமம் பெறாமல் தொழில் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உரிமம் இல்லாமல், கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.நடப்பு 2024-2025ம் ஆண்டில், தொழில் உரிமம் பெற்றவர்கள், வரும் 2025-2026ம் நிதி ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க, இம்மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து, 25 சதவீதம் காலதாம கட்டணத்தை தவிர்த்து கொள்ள வேண்டும். வணிக உரிமம் சம்மந்தமாக துறை மூலம் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். திருமண மண்டபம், தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டடத்தின் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தற்கான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை