உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கையெழுத்து இயக்கம்

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி யில் சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூ., சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தட்டாஞ்சாவடி தொகு திக்கு உட்பட்ட அரசு அச்சக சாலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தினசரி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.இதில் முதல்வர் தலையிட்டு, பொதுப்பணித்துறை மூலம் சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூ., தட்டாஞ் சாவடி தொகுதி குழு சார்பில் கையெழுத்து இயக்கம், நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.தொகுதி செயலாளர் தென்னரசு, மாநில குழு உறுப்பினர்கள் முருகன், செல்வம், எழிலன், தொகுதி பொருளாளர் தனஞ்செழியன் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாலைகளை சரி செய்ய கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை