பெரியபேட்டில் ரூ.2.56 கோடியில் சமுதாய நலக்கூடம் திறப்பு
திருபுவனை : திருபுவனை பெரியபேட்டில் ரூ.2.56 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் புதுச்சேரி 'பேட்கோ'சார்பில் திருபுவனை பெரியபேட்டில், ரூ. 2.56 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையேற்று ரிப்பன் வெட்டி சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சேவையை துவக்கி வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் முன்னிலை வகித்தார். விழாவில் சபாநாயகர் செல்வம், கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையரும் அரசு செயலருமான முத்தம்மா, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம் இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன், ஒப் பந்ததாரர் சங்கர், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் ராஜா, பாண்டியன், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.