புகார் பெட்டி
சாலையில் திரியும் மாடுகள்
வில்லியனுாரில் பைபாஸ் சாலையில், மாடுகள் சுற்றி திரிவதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார்.தேங்காய்த்திட்டு, முல்லை வீதி மற்றும் புது நகரில், மாடுகள் சாலையில் நிற்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.அலுமேலு, தேங்காய்த்திட்டு. சுகாதார சீர்கேடு
லாஸ்பேட்டை குமரன் நகர், காலிமனைகளில் குப்பைகளை வீசி விட்டு செல்லவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மணிவண்ணன், லாஸ்பேட்டை. சாலையில் மரம்
நெல்லித்தோப்பு வ.உ.சி., வீதியில், மரத்தை வெட்டி போட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ராஜி, நெல்லித்தோப்பு. வாகன ஓட்டிகள் அவதி
தேங்காய்த்திட்டு, திலகர் நகரில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஜான்சன், தேங்காய்த்திட்டு.