உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

லிப்ட் சரியாகுமா?

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் உள்ள 4 லிப்டுகள் பல மாதங்களாக பழுதாகி கிடப்பதால் வயதான ஆசிரியர்கள் 4வது மாடி வரை நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். விஷ்ணு, புதுச்சேரி.

குண்டும் குழியுமான சாலை

காராமணிக்குப்பம், முருகன் கோவில் எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வெங்கடாச்சலம், புதுச்சேரி.நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது.சிவராமன், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

நைனார்மண்டபத்தில் கேபிள் புதைக்க தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிறுப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.மணி, நைனார்மண்டபம்.

சுகாதார சீர்கேடு

தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.முகேஷ், தவளக்குப்பம்.

குப்பை குவியல்

காரமணிக்குப்பம் சாலையில் மழையால் நீர் ஓடியதில், குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது.ரவி, காரமணிக்குப்பம்.

பயணிகள் அவதி

தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால், பயணிகள் பஸ் ஏற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராபட், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி