உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மின்கம்பத்தில் செடி, கொடிகள்

மங்கலம் கோட்டைமேடு, மூகாம்பிகை நகரில், மின் கம்பத்தில், செடி, கொடிகள் மண்டியுள்ளதால், மின் விபத்து அபாயம் உள்ளது.ரகு, கோட்டைமேடு.

நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில், நாய்கள் சாலையில் சுற்றித் திரிவதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.பாரதி, அரியாங்குப்பம்.

வாகன ஓட்டிகள் அவதி

செயின்தெரேஸ் வீதியில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மகேஷ், புதுச்சேரி.

மின் விளக்கு எரியுமா?

அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே தெரு மின் விளக்கு எரியாமல் உள்ளதால், அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.மதி, தவளக்குப்பம்.

சாலை பணி மந்தம்

நைனார்மண்டபத்தில், சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராணி, மரப்பாலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி