உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்புகளால் இடையூறு

ஆக்கிரமிப்புகளால் இடையூறு

: வில்லியனுார் மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ரஜினிமுருகன், வில்லியனுார்.சாலையை அகலப்படுத்த வேண்டும்: உப்பளம் ரயில்வே கேட்டில் இருந்து கல்லறை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். செல்வன், முதலியார்பேட்டை. சாலை படுமோசம்: கிருஷ்ணா நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி,புதுச்சேரி மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் மதுபாரில் சாலையில் நின்று கொண்டு மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கண்ணன், தட்டாஞ்சாவடி. நாய்கள் தொல்லை: கடலுார் சாலை முதலியார்பேட்டையில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கிருஷ்ணா, புதுச்சேரி. - வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பாலத்தின் கீழே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பாரதி , அரும்பார்த்தபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !