பணி நிறைவு பாராட்டு விழா
புதுச்சேரி:ஓய்வு பெற்ற மின் துறை பொறியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி அரசு மின் துறை லாஸ்பேட்டை பிரிவில் உதவி பொறியாளராக பாண்டியன் 37 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு மின் துறை தலைமை அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜேஷ் சான்யால், கனியமுதன் அவரது சேவையை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.