உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : உள்ளாட்சித்துறை துணை இயக்குனராக பணியாற்றிய ரத்னாவிற்கு பணி நிறைவு பராட்டு விழா நடந்தது. புதுச்சேரி உள்ளாட்சித்துறையில் துணை இயக்குனராக (ஊரக வளர்ச்சி) பணிபுரிந்த ரத்னா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதுச்சேரி நகராட்சி மேரி ஹாலில் நடந்தது. விழாவிற்கு, உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கி, ரத்னாவின் பணியினை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சவுந்திரராஜன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரத்னா ஏற்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ