உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற ஓவர்சியர் கோவிந்தனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற ஓவர்சியர் கோவிந்தனுக்கு பாராட்டு விழா, துறை அலுவலகத்தில் நடந்தது. விழாவில், செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, கோவிந்தனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !