உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வளு துாக்கும் போட்டியில் வென்ற எஸ்.பி., கவர்னரிடம் வாழ்த்து

வளு துாக்கும் போட்டியில் வென்ற எஸ்.பி., கவர்னரிடம் வாழ்த்து

புதுச்சேரி : காமன்வெல்த் வளு துாக் கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சீனியர் எஸ்.பி., கவர்னரிடம் வாழ்த்து பெற்றார்.தென் ஆப்ரிக்காவில் கடந்த 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பவர் லிப்டிங் (வளு துாக்கும்) போட்டி நடந்தது.இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்தியா அணியில் பெண்கள் அணியில், 63 கிலோ எடை பிரிவில் புதுச்சேரி சீனியர் எஸ்.பி., அனிதாராய் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.பதக்கம் வென்ற சீனியர் எஸ்.பி., அனிதாராய் நேற்று கவர்னர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை