காங்., தலைவர் பிறந்தநாள்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பிறந்த நாளையொட்டி, காங்., மாநில செயலாளர் குமரன் ஏற்பாட்டில் லப்போர்த் வீதியில் உள்ள ஒஸ்.பி.எஸ்.,இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வைத்திலிங்கம் எம்.பி.,கலந்து கொண்டு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி,மாநில செயலாளர் ராஜாராம், மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஜெரால்ட், காங்., நிர்வாகிகள் மனோகர், வழக்கறிஞர் அன்பரசு, மோகனசுந்தரம், சித்தானந்தன், தமிழ்ச்செல்வன், தினகரன் மருவின்ஆகியோர் கலந்து கொண்டனர்.