உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரம் காங்., ஆர்ப்பாட்டம்

 போலி மருந்து விவகாரம் காங்., ஆர்ப்பாட்டம்

அரியாங்குப்பம்: போலி மருந்து தயாரித்த குற்றவாளிகளை, கைது செய்ய கோரி, காங்., சார்பில், தவளக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரியில், போலி மருந்து, மாத்திரைகள் தயாரித்து விற்பனை செய்ததை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கண்டுபிடித்தனர். பல இடங்களில் போலி மருந்துகள் இருந்த குடோன்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். போலி மருந்தை தயார் செய்த, உண்மை குற்றவாளியை கைது செய்ய வலிறுத்தி, காங்., சார்பில், தவளக்குப்பத்தில், நேற்று மாலை 6:00 மணியளவில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கலந்து கொண்டு, புதுச்சேரியில், போலி மருந்து மாத்திரைகளை தொழிற்சாலையில் மூலம் தயாரித்து விற்பனை செய்ததால் லட்சக்கணக்கான மக்கள் உயிருடன் விளையாடி உள்ளனர். போலி மருந்து தயாரித்த உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில், காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை