டெங்கு கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்: காங்., அறிவிப்பு
புதுச்சேரி: பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி காங்., செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அறிக்கை: புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்கு பாதிப்பிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, நகராட்சி துறையின் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, உயிர் பலி தொடருமானால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.