உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குச்சிப்பாளையத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி

குச்சிப்பாளையத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி

திருபுவனை: க.குச்சிபாளையம் கிராமத்தில் கடுமையான மின்அழுத்த குறைபாடு நிலவி வந்ததது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று, தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் மின்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, குச்சிப்பாளையத்தில் புதிய மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டுமென கடிதம் கொடுத்தார். இதன் அடிப்படையில் ரூ.19.95 லட்சம் செலவில் 200 கிலோ வாட் திறன்கொண்ட புதிய மின் மாற்றி அமைக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் க.குச்சிபாளையம் புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் பன்னிர்செல்வம், இளநிலை பொறியாளர் பழனிவேலு மற்றும் மின்துறை ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !